வஞ்சத்தில் ஒன்றானை நெஞ்சத்தில் நின்றானை மாசற்றானை
வலம்வந்து கனியொன்றைப் பெற்றானை வயிற்றானை துதிக்கை யானை
விஞ்சித்தான் நின்றிட்ட கஜமுகனை வென்றானை மாற்றிட்டானை
வித்தானை மறையானை குறையானை, வள்ளியினை வெருட்டினானை
கஞ்சத்தாள் பதத்தானை கதித்தோடும் மதத்தானை கருணையானை
கமண்டலத்தைக் கவிழ்த்தானை காவிரியை விரித்தானை கவிதையானை
தஞ்சந்தான் என்றவரைத் தள்ளானை புரப்பானை, தாங்குவானை
தமிழ் கேட்கும் இருபெரிய செவியானைப் பாடுகிறேன் காக்க நன்றே!கணபதி